R.Maheshwary / 2021 ஜனவரி 01 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய இடங்களிலுள்ள திரையரங்குகள் இன்று திறக்கப்படும் நிலையில், மீண்டும் மதிப்பாய்வு செய்யும் வரையில் குறித்த திரையரங்குகளில் 3டி படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திரைப்படங்களின் இடைநடுவில் வழங்கப்படும் இடைவேளையும் வழங்கப்படாது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் அருகருகே அமர்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் கொரோனா பரவலையடுத்து மூடப்பட்ட திரையரங்குகள் 9 மாதங்களின் பின்னர், இன்று மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago