J.A. George / 2021 மே 10 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டினை பாதுகாக்க அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ள பின்நிற்காது என்று கவல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டினை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நடைமுறை சாத்தியமான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி பெற்றுக்கொள்ள தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன், தற்போது காணப்படுவது நிதி பிரச்சினை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெறுவதில் ஒரு குறிப்பிட்ட தாமதம் உள்ளது என்றும், இது இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி ஆய்வகத்தில் ஏற்பட்ட சிக்கல் நிலையால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது உலக அங்கீகாரம் பெற்ற மூன்று தடுப்பூசிகள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மிகவும் முக்கியமானது. ஆனால் தடுப்பூசி மட்டுமே முக்கியமான காரணி அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அரசாங்கம் ஏனைய நடவடிக்கைகளிலும் தெளிவாக கவனம் செலுத்தியுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago