2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் இன்று

Freelancer   / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடுகின்றது.

இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் குழு அறை 2இல் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பேரவையினை பரிந்துரை செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் 35 பேர் கொண்ட தேசிய பேரவையின் யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் கடந்த 20ஆம் திகதி முன்வைத்திருந்தார்.

அந்த யோசனை வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X