Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில், நேற்றிரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த தனிப்பட்ட பகைமையே இந்த மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
குகதீஸ்வரன் மயூரன் (வயது 27), கொட்டடியம்பதி, தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த இளைஞன் பலியாகியுள்ளார். ச. ரஜீவன் மற்றும் க. பானுஷன்.ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.
தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் புனரமைப்புப் பணிகள் நேற்றிரவு நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த சந்தேகநபர், அங்கிருந்தவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
முதலில் பானுஷன் என்ற இளைஞர் மீது சந்தேகநபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்றபோது, அங்கிருந்த மயூரன் அவரைப் பிடிக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் தான் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் மயூரனைச் சரமாரியாகக் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர், தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவருடன் சேர்த்து இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைப் பிடிக்க வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago