Freelancer / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தக கப்பலின் 14 பணியாளர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
வியட்நாமில் இருந்து எகிப்து நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்த வர்த்தகக் கப்பலில், இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலின் பணியாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையின் கப்பலொன்று அனுப்பப்பட்டது.
அதன்படி, ஆபத்தில் சிக்கிய கப்பலில் இருந்த இந்திய, துருக்கிய மற்றும் அஸர்பைஜான் நாட்டவர்களைக் கொண்ட 14 பேர் அடங்கிய குழுவினரை பாதுகாப்பாக மீட்க முடிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. (a)

34 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago