2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

நாடு முடங்குமா? இன்று இறுதி முடிவு

Editorial   / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய கொரோனா வைரஸ் மாறி, நாட்டுக்குள் இனங்காணப்பட்டது. அத்துடன், கடந்த சில நாள்களாக, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையிலேயே முழு நாட்டையும் முழுமையாக மூடுவதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 எனினும், அவ்வாறான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. இன்று (15) நடைபெறும் பல்வேறான கூட்டங்களில் மேற்படி விவகாரம் தொடர்பில், தேசிய செயற்பாட்டு மையம் இன்று (15) கூடவிருக்கிறது. அதன்போது, மேற்படி விவகாரம் தொடர்பில், விவாதிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத், தொற்றுநோயியல் பிரிவு நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் அதன் பின்னர், இந்த விடயம் தொடர்பாக எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்  கூறியுள்ளார்.
கடந்தாண்டு டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி சேகரிக்கப்பட்ட 92 மாதிரிகளில் மரபணு தொடர்ச்சி தன்மையைஇ ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமை (12) மேற்கொண்டுஇ பிரித்தானிய கொவிட்-19 மாறியை சில இடங்களில் கண்டுபிடித்திருந்தனர். 
இந்நிலையில்இ குறித்த மாறியானது கடந்தாண்டு டிசெம்பர் ஆரம்பத்தில் அல்லது நடுப்பகுதியில்இ வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களிடமிருந்து பரவியிருக்கலாம் என ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நொயெதிர்ப்பு மற்றும் நுண் விஞ்ஞானத் திணைக்களத்தின் தலைவரான பேராசிரியர் நீலிக மலவிகே தெரிவித்துள்ளார். 
அந்தவகையில்இ குறித்த மாறி பரவுவதால் குறிப்பாக அண்மைய வாரங்களில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாமெனவும்இ தற்போது அங்கிகரிக்கப்பட்டுள்ள பைஸர்இ அஸ்ரனெக்காஇ மொடெர்னா ஆகிய தடுப்பு மருந்துகள் குறித்த மாறிக்கெதிராக செயற்படுமென நீலிக மலவிகே மேலும் கூறியுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .