2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நாட்டில் இன்றும் 16 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

J.A. George   / 2021 மே 10 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 மாவட்டங்களைச் சேர்ந்த 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் எட்டிகஹேகல்ல மேற்கு, கே.சி சில்வா கிராம சேவகர் பிரிவு, கதிரான வடக்கு அட்டபாகஹவத்த கிராமம், கதிரான தெற்கு பேசகர்ம கிராமம் என்பன முடக்கப்பட்டுள்ளன

அத்துடன், சேதவத்த மஹா பமுணுகம பிரதேசம், குஞ்சகஹவத்த கிராசேவகர் பிரிவின் 44 ஆவது ஒழுங்கை மற்றும் நில்சிறி கிராம சேவகர் பிரிவின் 3ஆம், 7ஆம் ஒழுங்கைகள் முடக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் நவமடகம கி.சே பிரிவின் நவமடகம பிரதேசம், பக்மீதெனிய கிராம சேவகர் பிரிவின் ரன்ஹெலகம பிரதேசம் மற்றும் சேருபிட்டிய கிராம சேவகர்  பிரிவின் சேருபிட்டிய உப பிரதேசம் என்பன முடக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் பலன்னொருவ, கோரளைம, கும்புக்க மேற்கு,மற்றும் நாரதங்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் அங்கமன கிராசேவகர் பிரிவும் மொனராகலை மாவட்டத்தின் போபிட்டிய கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளனவென அறிவிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X