2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘நாட்டை கட்டியெழுப்பவே தேசிய அரசாங்கம்’

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தில், சகல அரசியல் கட்சிகளையும் அரசாங்கத்தில் நேர்மையாக பங்குகொள்ளச் செய்யும் நோக்கிலேயே, தேசிய அரசாங்கத்தை அமைக்க, அமைச்சரவையின் அமைச்சர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதென, அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்றத்தின் சபை முதல்வருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

 தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில், அமைச்சரால் நேற்று (03) விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

“அபிவிருத்தி நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்கவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல், மக்கள் இறைமைக்காகவும், பயங்கரவாதத்தை முற்றாக இல்லாமல் ஒழிப்பதாக ஏற்றுக்கொண்ட சகல தரப்பினருக்காகவும், பலமிக்க அரசாங்கத்தை உருவாக்கும் தேவையை ஏற்றுக்கொண்ட சகல தரப்பினரும், இந்த தேசிய அரசாங்கத்துடன் இணையவேண்டும்” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது. 

தேசிய அரசாங்கத்தை அமைத்து, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனையை, அரசமைப்புக்கு அமையவே நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்‌ஷ, தான் விரும்பியபடி அமைச்சர்களின் எண்ணிக்கையை 60ஆக அதிகரிப்பதற்கு அன்று நடவடிக்கை எடுத்தமை ,அரசமைப்பு அல்லது நாடாளுமன்றத்தை புறக்கணித்தாகும் எனவும் தெரிவித்தார். 

“தன்னிச்சையான அந்த முறையை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் ஊடாக நாம் மாற்றியமைத்தோம். அதற்கமைய, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின், அதற்காக நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு நாம் உருவாக்கியுள்ள ஜனநாயக முறைக்கமைய, இச்சந்தர்ப்பத்தில் அமைச்சரவையை அதிகரிக்க நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில், பதற்றமாகவும் விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களைத் தெரிவிப்பவர்களிடம் நாம் கோருவது, அன்று மஹிந்த அரசமைப்புக்கு முரணாக அமைச்சரவையை அதிகரித்த சந்தர்ப்பத்தை நினைவுகூருவது சிறந்தது” என, தனது ஊடக அறிக்கையில் அமைச்சர் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .