Freelancer / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு கிரான் பகுதியில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியமையை அடுத்துக் கைது செய்யபட்ட 10 பேரும், நேற்று (08) பிணையில் விடுதலைசெய்யப்பட்டனர்.
இவ்வாண்டு மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டது.
எனினும், நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் தீபச் சுடரேற்றி, கடலில் பூக்கள் தூவி, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுதப்பட்டது.
இந்த நிகழ்வின் படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், 10 பேரை கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில், இவ் வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, வழக்கில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் விண்ணப்பித்த பிணை மனுவின் அடிப்படையிலே 10 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026