2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டு விழாவில் கைகலப்பு: 7 பேர் காயம்

Editorial   / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


  எம்.எச்.எம். சியாஜ் 

ஆனமடுவ, கரம்பேவ பிரதேசத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவின் போது ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் புத்தாண்டு விழாவிற்கு வருகை தந்திருந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய பகைமை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாக்குவாதமாகத் தொடங்கி, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோதலில் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்ட சுமார் 20 பேர் வரை ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களுக்குப் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .