S. Shivany / 2021 ஜனவரி 14 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பெந்தொட்ட பாலத்துக்கு அருகில், தென் மாகாணத்தை நோக்கி பயணம் மேற்கொண்ட 102 பேருக்கு, இன்று(14) மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9.00 மணி தொடக்கம் 1.00 மணிவரை பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் பயாகல மற்றும் ஊரகஹா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .