2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

’பிரதேச சபை உறுப்பினர் போதைப்பொருள் வியாபாரம்’

Freelancer   / 2025 செப்டெம்பர் 09 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தகால அரசாங்கதத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு என தெரியவருகின்றது என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவிததார்.

தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

எங்களது செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  தப்பிச் சென்ற குறற்வாளிகளை சர்வதேச பொலிஸார் மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் கைது செய்து எமது நாட்டிற்கு கொண்டுவந்து விசாரணை செய்ததன் மூலமாக போதைப்பொருள் உற்பத்தி நிலையங்களை கண்டுபிடித்துள்ளோம். 

இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக  சட்டத்துக்குட்பட்டு, நீதியான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினருக்கு பூரண சுதந்திரத்தை வழங்கியதன் மூலமாக இவ்வாறானவர்களை தொடர்ச்சியாக கைதுசெய்து வருகின்றோம்.

மேலும் குறித்த போதைப்பொருள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையின் போது அரசியல்வாதிகளும், கடந்த காலத்திலே ஆட்சிபுரிந்த அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதேவேளை கடந்த கால அரசாங்கத்தினுடைய தொடர்புபட்ட முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் தொடர்புபட்டதாக அறிய முடிகின்றது என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X