Editorial / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையால், வைத்தியசாலைகள் பலவற்றில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுள்ள நான்கு கட்டில்களும் நிரம்பியுள்ளன.
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகள் பலவற்றில், அவசர சிகிச்சைப் பிரிவுள்ள கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியிருக்கின்றன.
போதனா வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நான்கு கட்டில்கள் மட்டுமே உள்ளன. அந்த நான்கு கட்டில்களும் கொரோனா தொற்றாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சில வைத்தியசாலைகளில் அந்த நான்கு கட்டில்களும் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் இந்நாள்களில் சாதாரண வைத்திய சேவைகள் யாவும் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன.
பதுளை வைத்தியசாலையிலும் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சகல அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ஆகக்கூடுதலான கொள்ளளவுக்கு அண்மித்துள்ளது.
ஆகையால், கொழும்புக்கு வெளியே கொரோனா மத்திய நிலையங்களாக இருக்கும் மத்திய நிலையங்களின் பகுமுகக்கூடத்தில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகின்றன. இதுதொடர்பில் சமூக வலைத்தளங்களில் படங்கள் பகிரப்பட்டுள்ளன.
“தற்போது இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள்களின் எண்ணிக்கையைப் போல, இன்னும் நான்கு அல்லது ஐந்து மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர்” என ரவி குமுதேஷ் தலைமையிலான துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025