Editorial / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரை சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு ரொட்டும்ப, பனாகடுவ பகுதியில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை தெனியாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டும்ப, பனாகடுவ பகுதியைச் சேர்ந்த 50 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும் ஏனைய இருவரும் அவர்களது உறவினர்களும் ஆவர். உயிரிழந்த நபரும் இச்சந்தேக நபர்களின் உறவினர் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2006.11.06 அன்று பஸ்கொட - பிடபெத்தர பிரதான வீதியில், பனாகடுவ மர ஆலைக்கு முன்னால் உள்ள பாலத்திற்கு அருகில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் தம்பஹல, விலயாய, 'ரணசெவன' எனும் முகவரியைச் சேர்ந்த 63 வயதான ரங்கொடகே பியசிறி என்பவராவார். இவர், ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026