2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பாகிஸ்தான் பிரதமருக்கு பாராளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்ற வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் 22 ஆம் திகதி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் அவர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .