Freelancer / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களில், தரம் 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
அதனால் அவர்களுக்கு வழக்கம்போல் புத்தகங்கள் வழங்கப்படும். அத்துடன் கல்வி சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது.
அதற்கு பதிலாக எளிமைப்படுத்தப்பட்ட கற்றல் கையேடுகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆசிரியர்களுக்கான கற்றல் கையேடுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவை அச்சிடப்படும் என்றும் நாலக களுவெவ தெளிவுபடுத்தினார். R
26 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
4 hours ago