Janu / 2026 மார்ச் 25 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் நடைபெற்ற அழகிப் போட்டி ஒன்றில், மலைப்பாம்பு ஒன்றை கழுத்தில் சுற்றியவாறு விலங்கு வதைக்கு உட்படுத்தும் வகையில் நடனமாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான மெத்மி ஹிரண்யா என்ற யுவதியை 5 இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
கொழும்பில் உள்ள 'ரோயல் மார்க்ஸ் அரேனா' (Royal Marks Arena) வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற 'அவுருது குமார - குமரிய' (புத்தாண்டு இளவரசன் - இளவரசி) அழகிப் போட்டியின் 15ஆவது சுற்றின் போது, குறித்த யுவதி மலைப்பாம்பு ஒன்றை கழுத்தில் சுற்றியபடி நடனமாடியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.
சந்தேகநபரான யுவதி வனஜீவராசிகள் திணைக்களத்தில் முன்னிலையானதை அடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.

22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago