2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பாவனைக்கு உதவாக தேயிலைத் தூளுடன் ஒருவர் கைது

Nirosh   / 2021 மார்ச் 13 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு-  மாமாங்கம் பிரதேசத்தில்  அனுமதிப்பத்திரமின்றி மனித பாவனைக்கு உதவாத தேயிலை தூள்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அனுமதிப்பத்திரமின்றி சிலோன் தேயிலை என்ற பெயரில் மனித பாவனைக்கு உதவாத தேயிலை தூள்களை விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை கைது செய்ததுடன் அங்கிருந்து 600 கிலோகிராம் தேயிலைத் தூள்களை மீட்டனர்.

குறித்த தேயிலைத் தூளை எங்கிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள என்பதுத்  தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கும் பொலிஸார்,  கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .