2026 மார்ச் 21, சனிக்கிழமை

பிரதான மார்க்கத்தில் 10 ரயில்களே இயங்கும்

Freelancer   / 2021 நவம்பர் 14 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான ரயில் மார்க்கத்தின் மீரிகம மற்றும் விஜயராஜதஹன ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக நாளை (15) வழமை போன்று ரயில்கள் இயங்காது எனவும் கொழும்பு கோட்டை வரை 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும் எனவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தடைப்பட்ட இடத்திலிருந்து மூன்று ரயில்களும் வெயாங்கொடையிலிருந்து மூன்று ரயில்களும், கம்பஹாவிலிருந்து ஒரு ரயிலும், ராகமயிலிருந்து இரண்டு ரயில்களும் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X