Ilango Bharathy / 2021 டிசெம்பர் 25 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்.
கொழும்பிலிருந்து போதைப்பொருளைக் கடத்தி வந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்த நபரொருவர் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நபரிடமிருந்து 30 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 5,40,000 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
8 hours ago
9 hours ago