Janu / 2026 மார்ச் 31 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும் கொத்து (Kottu) ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், இந்த புதிய விலை மாற்றம் செவ்வாய்க்கிழமை (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கூறுகையில், சிற்றுண்டிகளின் (Short eats) விலைகள் 10 ரூபாவினாலும், ஒரு கோப்பை 'பிளேன் டீ' மற்றும் பால் தேநீரின் விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
உணவகங்கள் நடத்தப்படும் அனைத்து இடங்களிலும் மாதாந்த மின்சார பயன்பாடு 180 அலகுகளை தாண்டுவதாகவும், இத்தகைய சூழலில் பாரிய மின்சார கட்டணத்தை சுமக்க வேண்டியுள்ளதால், இந்த தொழிலை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காகவே இவ்வாறான விலை அதிகரிப்பு தீர்மானத்தை எடுத்ததாக ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026