Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர,ஜூட் சமந்த, ரஸீன் ரஸ்மின்
புத்தளம் -மன்னார் பழைய வீதி, மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த வீதியானது இன்று(14) முதல் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
மழை காரணமாக, கலா ஓயாவின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதுடன், இன்று(14) கலா ஓயா பெருக்கெடுத்ததையடுத்து, குறித்த வீதியுடனான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் அலஹகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையடுத்து, மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி பயணிப்போரும், புத்தளத்திலிருந்து மன்னார் நோக்கி பயணிப்போரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
8 hours ago