Freelancer / 2026 பெப்ரவரி 06 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்தினர் யுத்தத்தை வென்றவர்கள் தொடர்பில் சுதந்திர தினத்தில் கூற முடியவில்லை. எமது நாட்டில் குறைந்தது. இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள், பங்களிப்புகள் தொடர்பில் பெருமையாக அரசாங்கத்திற்கு பயன்படுத்த முடியாது என்றாலும், விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை இனவாதம் அல்ல என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி., பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) அன்று தெரிவித்தார்.
நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. எமது அரச தலைவருக்கு இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது உங்களின் அரசியலாக இருந்தாலும் இராணுவத்தினர் தொடர்பில் உங்களால் பேச முடியாவிட்டால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கதைத்து பலனில்ல என்றார்.
சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்துகின்றனர். அதனை கண்டும் காணாதது போன்று செயற்படுகின்றனர். இனவாதத்தை தூண்ட மாட்டோம் என்று ஜனாதிபதி கூறினாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றனர்.
தெற்கு பெரும்பான்மையினத்தவரை விமர்சிப்பதன் மூலம் டயஸ்போராக்களினதும் வடக்கு மக்களினதும் மனங்களை வெற்றிக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு செய்யவும் முடியாது என்றார்.
10 minute ago
24 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
33 minute ago
1 hours ago