Editorial / 2026 மார்ச் 30 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (30) அன்று உத்தரவிட்டது.
பெண்களின் வாட்ஸ்அப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆபாசப் புகைப்படங்களாக மாற்றி, தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
ஏற்கனவே இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மற்றுமொரு சந்தேகநபர் கௌரவ நீதவான் நூர்தீன் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகளான ஷாமிலா மன்சூர், எம்.வை. அன்வர் ஸியாத், எம்.ஏ. நஸீல் மற்றும் முஹம்மட் பிர்னாஸ் ஆகியோர் முன்னிலையாகினர்.
இச்சம்பவம் குறித்து
இளைஞர், யுவதிகள் இவ்வாறான இணையவழி மோசடிகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிறருடைய புகைப்படங்களை அனுமதியின்றி மாற்றிப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். தனிநபரின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான பாதிப்புகளைச் சந்திக்கும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு முறையிடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்குப் பின்வரும் அறிவுறுத்தல்களை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் வழங்கியுள்ளது:
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026