2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் சபையில் குழப்பம்’

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது குழுவினர் அவர்களது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால், பாரிய இடையூறை இன்று நாடாளுமன்றில் ஏற்படுத்தினரென்று, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபாநாயகரை அவரது அக்கிராசனத்திலிருந்து அப்புறப்படுத்தும் வகையில் மிகவும் மோசமான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இவர்களது நடவடிக்கையின் பிரதிபலனாகவே மஹிந்தவின் உரைக் குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடியாமல் போனது

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சம்பவங்களை முழு நாட்டு மக்களும், கட்சி, இனம், நிறம், மொழி பேதமின்றி நிராகரிக்க வேண்டிய நிலையே நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்டது.

இன்று இங்கு இடம்பெற்ற பிரச்சினையானது வாகனங்கள், சொத்துக்கள், அரச அதிகாரிகளை தமக்கு பயன்படுத்துவதற்கான அதிகாரங்களைப் பெற்றுக்​கொள்ளத்தானே நாடாளுமன்றம் முடிவு செய்தால் வாக்கெடுப்புக்குச் செல்ல அதனை தீர்மானிக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்தில் உள்ள  மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் தமது  விருப்பத்தைப் தெரிவிப்பதன் மூலம் தீர்மானிக்கலாம். எனவே தேர்தல் வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் யோசனையை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த யோசனைக்கு நாமும் ஆதரவளிப்போம் என்றார்.

ஆனால் உரைக்கு கூட வாக்கெடுப்பை நடத்த விடாதவர்கள் தேர்தலுக்கு செல்வதற்கான வாக்கெடுப்பை நடத்த விடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .