Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் வற் வரியை குறைத்து, தேச நிர்மாண வரியை நீக்கியதையடுத்து, அதன் பயன்களை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 5 ரூபாயா் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த வரிச் சலுகை காரணமாக பேக்கரி உரிமையாளர்களுக்குக் கூடுதலான நன்மை கிடைத்திருப்பதாக அந்தச் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன கூறியுள்ளார்.
இந்த வரிச்சலுகை காரணமாக ஒரு கிலோகிராம் கேக்கின் விலை 50 ரூபாயால் குறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago