Freelancer / 2025 நவம்பர் 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (26) நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நான்கு ஆண்களும் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (a)

7 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
47 minute ago