Janu / 2026 மே 06 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர், பொலன்னறுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பிராந்திய குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் பொலன்னறுவை, 'தீப உயன' (Deepa Uyana) பகுதிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிராந்திய குற்ற புலனாய்வு பிரிவின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முன்னர் பொரளை, கண்டி, மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களினால் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

21 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
34 minute ago