2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

’மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல’

Freelancer   / 2022 செப்டெம்பர் 16 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களை ஒடுக்கும் அரசை விரட்டியடித்து விட்டு ஜனநாயக அரசை ஸ்தாபிப்பதாக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் போதும், நாட்டின் பொருளாதாரக் கொலையாளியான பிரிவினர்களின் தயவில் அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்துள்ளனர் எனவும், அவர் கூட தற்போது ராஜபக்‌ஷ குடும்பத்தின் பிணைக்கைதியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அம்பாறை மக்கள் சிறந்த முறையில் விவசாயம் செய்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர், அவர்கள் யாருடைய அடிமைகளோ அல்லது கைதிகளோ அல்லனர் என்றாலும், அன்று சிறந்து விளங்கிய நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், கூலித்தொழிலாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்,அங்கவீன குடும்பங்கள்,பாடசாலை சிறுவர்கள் என அனைவரும் இன்று உதவியற்ற நிலையில் உள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் திரிபோஷா கூட கொடுக்க முடியாத இந்த அரசாங்கம் இந்நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கொன்று குவித்த ராஜபக்‌ஷர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்காவிட்டாலும் அவர்களுடன் நட்புறவு கொண்டாடும் பிரிவினர்களூடாக அமைச்சுப் பதவிகளை பெற்று ராஜபக்‌ஷர்கள் விரும்பியவாறு நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 இலட்சமும்,
காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 இலட்சமும் என நட்ட ஈடு வழங்கப்பட்டாலும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு கோடிக்கணக்கு எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஈஸ்டர் தாக்குதலில் எங்களுடைய சொந்த மக்களே கொல்லப்பட்டாலும் சுகபோகம் அனுபவிப்பது அமைச்சர்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலவரங்களை உருவாக்க மக்கள் வீதியில் இறங்கவில்லை என்றும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இதுவல்லவெனவும்  தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், புதிய தேர்தல் மூலமே அந்த மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும்,அதற்காக அனைவரும் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .