2026 மார்ச் 30, திங்கட்கிழமை

மதில் மீது காரை செலுத்திய ஆளும் தரப்பு எம் பி

Lenin Raj   / 2026 மார்ச் 30 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}



தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் பயணித்த கார், இன்று (30) அதிகாலை சிலாபம் காக்காப்பள்ளி பகுதியில் விபத்துக்குள்ளானது.

எனினும், இந்த விபத்தில் அவர் எவ்விதக் காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகச் சிலாபம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தனது தனிப்பட்ட அலுவல் ஒன்றினை முடித்துவிட்டு, மதுரங்குளியில் அமைந்துள்ள தனது இல்லத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் அவர் மட்டுமே காரில் பயணித்துள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட அதீத தூக்கக் கலக்கத்தின் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்து விலகி காக்காப்பள்ளி பகுதியில் உள்ள மதில் ஒன்றில் மோதியுள்ளது.

இதில் கார் சேதமடைந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போது அவர் மதுரங்குளியில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாகச் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .