Editorial / 2026 மார்ச் 31 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது கணவருக்கு மதுபோதையில் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுவாக கணவன்மார்கள் மது அருந்திவிட்டு மனைவியைத் துன்புறுத்தும் சம்பவங்களுக்கு மத்தியில், இந்தத் தலைகீழ் சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கும், பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், பெண்ணின் மதுப்பழக்கம் வினையாக மாறியுள்ளது.
தனியார் நிறுவன ஊழியரான கணவர், அம்ருதஹள்ளி பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது:
தனது மனைவி தினமும் நண்பர்களுடன் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதைக் கண்டித்தபோது, "இது எனது தனிப்பட்ட வாழ்க்கை, இதில் தலையிடக் கூடாது" என அவர் கட்டளையிட்டுள்ளார்.
தனது கடந்த காலத் தொடர்புகள் மற்றும் உல்லாச வாழ்க்கை குறித்து கணவரிடம் வெளிப்படையாகக் கூறி, அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளார்.
மதுபோதையில் வீட்டிற்கு வரும் மனைவி, ஆபாச வீடியோக்களைக் கணவருக்குக் காண்பித்து, அதேபோலத் தனது தோழிகளுடன் உல்லாசமாக இருக்குமாறு கணவரைத் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.கணவர் இதற்கு மறுப்புத் தெரிவித்தபோது, அவரை மீண்டும் மீண்டும் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் அவரை விட்டுப் பிரிந்து வாழ முடிவு செய்த கணவர், தான் வாங்கிக் கொடுத்த நகைகளைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் மனைவி நகைகளைத் தர மறுத்ததையடுத்து, நீதி கேட்டு அவர் பொலிஸ் நிலையத்தை நாடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், அம்ருதஹள்ளி பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்தப் பெண்ணை நேரில் அழைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago