Editorial / 2025 நவம்பர் 05 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாயை மற்றொரு இராணுவ சிப்பாய் வெட்டிக் கொன்ற சம்பவமொன்று மகாஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மகா ஓயாவின் பொரபொல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அம்பாறை மல்வத்த முகாமில் பணியாற்றும் (21) இராணுவ வீரர் ஆவார்.
மின்னேரியா ராணுவ முகாமில் பணியாற்றும் (24) இராணுவ வீரர் ஒருவர் இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட இராணுவ வீரர், சந்தேக நபரான இராணுவ வீரரின் மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகவும், தான் வீட்டில் இல்லாத போது சந்தேக நபரின் மனைவியுடன் அந்த நபர் (மரணம் அடைந்தவர்) அறையில் இருந்த போது வீட்டுக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வீட்டுக்கு வந்த போது, அதைக் கண்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒரு கத்தியால் இராணுவ வீரரை வெட்டிக் கொன்றுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
4 minute ago
12 minute ago
27 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
27 minute ago
41 minute ago