2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மஹிந்த – ரணில் ஆதரவாளர்களால் நாடாளுமன்ற வளாகம் சூடுபிடித்திருந்தது

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

 

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக கூடிய அவரது ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்கான நுழைவுப் பகுதியில், நேற்று( 14) போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனால், நாடாளுமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததோடு, பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த அதேவேளை, நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கான பவுசர் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

மஹிந்த ஆதரவாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்ததால், நாடாளுமன்ற வளாகப் பகுதியில், பதற்றநிலை உருவாகியிருந்ததோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

நாடாளுமன்ற நுழைவாயில் பகுதி வீதியின் எதிர் எதிர்ப் பக்கங்களில் திரண்ட மஹிந்த – ரணில் ஆதரவாளர்கள், வாய்த்தக்கர்த்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் தலையீடுகளைத் தொடர்ந்து, இரு பிரிவினரும் சில நிமிடங்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் கலைந்துசென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .