J.A. George / 2021 மே 11 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணங்களுக்கு இடையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் 'பயணக் கட்டுப்பாடுகள்' விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொரோனா ஒழிப்பு தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்துகொண்ட போது இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க நேற்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
எனினும், 'பயணக் கட்டுப்பாடுகள்' விதிக்கப்படும் நாள் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இது தொடர்பில் இராணுவ தளபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
“சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (10) ஒரு கூட்டம் நடைபெற்றது.
நாட்டை தனிமைப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
அதன்படி, தேவைக்கேற்ப மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை நடைமுறைப்படுத்தக்கூடிய முறை குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
பயணக் கட்டுப்பாடுகளின் காலாவதி திகதி குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அதன்படி, இந்த கட்டுப்பாடுகள் மே 31 வரை மட்டுமே நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago