Freelancer / 2026 பெப்ரவரி 21 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (20) மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, மாமனார் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் மருமகனைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மருமகன், பிரதேசவாசிகளால் தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை (வயது 33) எனவும், அவரது மனைவி தற்போது தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலையை செய்த பின்னர் மாமனார் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்காக தெரணியகலை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R
2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago