Editorial / 2026 மே 03 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முயிசு (Mohamed Muizzu), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். நாளை (04) ஆரம்பமாகவுள்ள தமது உத்தியோகபூர்வ விஜயத்திற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.
ஜனாதிபதியுடன் மாலைதீவின் முதல் பெண்மணி (First Lady) மற்றும் அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் 20 பேர் அடங்கிய தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
மாலைதீவின் மாலே நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் "யு.எல். - 116" (UL-116) ரக விமானத்தில் பயணித்த அவர்கள், இன்று மாலை 05:33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
தமது இலங்கை விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி முகமது முயிசு உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 06 ஆம் திகதி மீண்டும் மாலைதீவு நோக்கிப் புறப்படவுள்ளனர்.
21 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
34 minute ago