S.Renuka / 2025 நவம்பர் 30 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மகாவலி கங்கையில் தற்போது பாரியளவு நீர் பாய்ந்து வருவதாகவும், மாவில் ஆறு நீர்த்தேக்கமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஒரே நீர்த்தேக்கமாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
மாவிலாறு நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப் பகுதியில் வசிக்கும் மக்களும், அதைச் சுற்றியுள்ள பிரதேசவாசிகளும் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026