2026 மார்ச் 18, புதன்கிழமை

முட்டையில் Expiry date; ஏப்ரல் 1 முதல் அமுல்

S.Renuka   / 2026 மார்ச் 18 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேசத்தில் விற்கப்படும் முட்டைகளில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளைக் கட்டாயமாக அச்சிட வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதியின்படி, பழைய அல்லது கெட்டுப்போன முட்டைகளை 'புதியவை' என கூறி விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த முடிவை, கால்நடை வளர்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் இணைந்து செயல்படுத்துகின்றனர்.

மேலும், சாதாரண வெப்பநிலையில் முட்டைகள் இரண்டு வாரங்கள் மட்டுமே கெடாமல் இருக்கும் நிலையில், பல வணிகர்கள் சரியான வெப்பநிலையைப் பராமரிப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

புதிய விதியை மீறும் கடைக்காரர்களின் முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என்றும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இதற்காகத் தயாராகுமாறு உற்பத்தியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் முட்டை விற்பனையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதும் சாத்தியமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X