Editorial / 2019 ஒக்டோபர் 21 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித வளத்தை அபிவிருத்தி செய்தால் மாத்திரமே நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற முடியும்” என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இதனைக்கூறிய அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மனித வளத்தை எந்தளவு அபிவிருத்தி செய்கின்றோம் என்ற விடயத்திலேயே நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தங்கியுள்ளது. மனித வளத்தை முன்னேற்றுவதில் 3 விடயங்கள் உள்ளடங்குகின்றன. அவை கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு என்பனவே. இவற்றின் ஊடாகவே மனித வளத்தை முன்னேற்ற முடியும்.
எமது நாட்டின் தொழில்முறையான கல்வி வளர்ச்சி போதுமானதாக இல்லை. பாடசாலை கல்விக்குள் காலடி எடுத்து வைக்கும் ஒரு மாணவன். அதிலிருந்து வெளியேறும்போது, சிறந்த கல்வியறிவு உடைய பட்டதாரியாக அல்லது, தொழில்சார் தகைமைகளை கொண்ட ஒருவராகவே வெளியேறவேண்டும்.
இவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் தொழில்முறை பயிற்சிகளுடனான கல்வியை பெற்றுக்கொடுக்க உலக நாடுகள் ஏற்றுக்கொண்டதன்படி தேசிய உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும்” என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago