Nirosh / 2021 ஜனவரி 16 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யானை தந்தத்திலிருந்து பெறப்பட்ட கஜமுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த இராணுவ வீரர் இருவர், முல்லைத்தீவில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுவாகல் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கதிர்வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர்களில் ஒருவரின் வயிற்றில் கஜமுத்து இருப்பது மருத்துவரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கஜமுத்துவை மருத்துவர்கள் மலவாயில் ஊடாக வெளியே எடுத்துள்ளார்கள்.
மேற்குறித்த இருவரும் தெற்கில் இருந்து வியாபார நோக்கத்துக்காக கஜமுத்தினை முல்லைத்தீவுக்கு எடுத்து வந்திருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .