Editorial / 2021 ஜனவரி 13 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, நான்கு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குடியுரிமையை இழக்கக்கூடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின், அவர், தன்னுடைய பாராளுமன்ற அங்கத்துவத்தை இழப்பார். எனினும், எம்.பி பதவியையும் காப்பாற்றிக்கொண்டு, குடியுரிமையையும் இழக்காமல் இருக்கவேண்டுமாயின் ஜனாதிபதி மன்னிக்கவேண்டும்.
எனினும், ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்பது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இதுவரையிலும் எவ்விதமான பகிரங்க அறிவிப்பொன்றையும் விடுக்கவில்லை.
இதேவேளை, 'உயர்நீதிமன்றத்தின் நாய் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' எனப் பகிரங்கமாக அறிவித்ததையடுத்து, அன்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த, இந்நாள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பியான எஸ்.பி. திஸநாயக்கவை குற்றவாளியாக இனங்கண்ட உயர்நீதிமன்றம், அவருக்கும் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
அன்றைய காலக்கட்டத்தில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தார். எனினும், அதன் பின்னர் ஜனாதிபதியாகத் தெரிவான மஹிந்த ராஜபக்ஷ, எஸ்.பீக்கு பொதுமன்னிப்பளித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .