Freelancer / 2025 ஒக்டோபர் 25 , மு.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர்.
இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர். (a)
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026