Editorial / 2021 ஜனவரி 09 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்பின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே குறித்த போராட்டதை வலுசேர்க்கும் முகமாக அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Apr 2026