Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மார்ச் 21 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்களும், 3 சபைகளில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனுக்களும், 2 சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுக்களும், பல சபைகளில் சுயேச்சைக் குழு (அர்ச்சுனா) வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 148 கட்சிகளும், 27 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தன. இதில் 136 கட்சிகளும், 23 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தன.
அவற்றில் 22 கட்சிகளுடைய வேட்புமனுப் பத்திரங்களும், 13 சுயேச்சைக் குழுக்களுடைய வேட்புமனுப் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. (a)
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago