Editorial / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான வழக்கில், கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த குமாரசேகரவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஷலனி பெரேரா இந்த உத்தரவை இன்று (31) பிறப்பித்துள்ளார்.
முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த குமாரசேகர மன்றில் முன்னிலையாகாத நிலையில், இந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சந்தேகநபரான கொழும்பு பிராந்தியத் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையால் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இவர்கள் இருவருக்கும் எதிராக, சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026