Freelancer / 2025 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த், உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நீண்ட காலமாக மிகவும் மதிக்கும் ஒரு தலைவரிடமிருந்து அவற்றைப் பெறுவது மிகப்பெரிய மரியாதை. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஜெய் ஹிந்த் என்று தெரிவித்துள்ளார். (a)

42 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
7 hours ago