2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ரணிலுக்கு என்ன நடந்ததென தெரியவில்லை

Nirosh   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன நடந்ததென தெரியவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

போராட்டம் ஊடாக ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, காகத்துடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதுவொரு மோசமான செயல். குறிப்பாக நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறும் செயற்பாடு எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X