Editorial / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

மிதிகம, கங்கொடகம பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத குழுவினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (18) இரவு 11:30 மணிக்கும் 12:00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டின் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்திற்கும் தீ வைத்துள்ளனர். எனினும், உடனடியாகச் செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், நீரைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் மோட்டார் வாகனத்திற்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சுவர்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், வீட்டிலிருந்த எவருக்கும் காயங்களோ உயிராபத்தோ ஏற்படவில்லை.
இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் அல்லது தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago