Freelancer / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக வருகை தரும் மக்கள் தமது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 31ஆம் திகதி வரை தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் ஆகிய பகுதிகளை அண்மித்து நடத்தப்படும் நிகழ்வுகளை முன்னிட்டு இந்த விசேட ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, தாமரைக் கோபுரத்தை அண்மித்து நடைபெறும் நிகழ்வுகளை பார்வையிடுவதற்காக வருகை தரும் பொதுமக்கள் தமது வாகனங்களை, கபிதாவத்தை கோவில் வாகன நிறுத்துமிடம், டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, காமினி சுற்றுவட்டம் முதல் ரீகல் வரையான வீதியின் இரு மருங்கிலும் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் ஆகிய பகுதிகளில் நிறுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் ஆகிய பகுதிகளை அண்மித்து நடைத்தப்படும் நிகழ்வுகளுக்காக வருகை தரும் பொது மக்கள் தமது வாகனங்களை, காலி முகத்திடல் மத்திய வீதி வாகன நிறுத்துமிடம் மற்றும் புதிய பாலதக்ஷ மாவத்தை வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (a)
20 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
4 hours ago
4 hours ago