2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படும் பணிகள் நிறைவு

Editorial   / 2019 நவம்பர் 06 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் கூறியுள்ளது.

ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏனைய ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .